• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முதியோர் இல்லத்தில் பிறந்தநாளைக் கொண்டாடிய பாஜக மாநில செயலாளர் துரை சேனாதிபதி..,

ByM.I.MOHAMMED FAROOK

Jul 14, 2026

புதுச்சேரி மாநில பாஜக மாநில செயலாளர் துரை சேனாதிபதியின் பிறந்தநாளை முன்னிட்டு, காரைக்காலில் உள்ள சப்தஸ்வரம் முதியோர் இல்லத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து துரை சேனாதிபதிக்கு பாடல்கள் பாடி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தொடர்ந்து, அவருக்கு அட்சதை தூவி நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் கிடைக்க வாழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு அணி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் துரை சேனாதிபதிக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பின்னர், தனது பிறந்தநாளை முன்னிட்டு துரை சேனாதிபதி கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, சப்தஸ்வரம் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் முதியோர் இல்ல நிர்வாகிகள் கலந்து கொண்டு துரை சேனாதிபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.