

துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் ஏனென்றால் அது மாநில உரிமை சார்ந்தது ..துணைவேந்தர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது
மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் பேசும்போது…:- நாட்டின் சிறந்த 200 பொறியியல் கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன . திமுக ஆட்சியை உயர்கல்வியின் பொற்காலமாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாற்ற வேண்டும். தமிழகத்தில் கல்வித்துறையில் நாம் மேலும் உயர்ந்து நிற்க வேண்டும்.
தொழில் நிறுவனங்களின் பங்களிப்போடு பாடத்திட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளை கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டும். ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேராசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகிறது. துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது ஏனென்றால் அது மாநில உரிமை சார்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

