பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் உயிரை பணயம் வைத்து செய்தி வழங்கிய செய்தியாளரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கழுத்து வரை தண்ணீர் இருக்கும் இடத்தில் இருந்து தனது உயிரை பணயம் வைத்து செய்தியாளர் ஒருவர் செய்தி வழங்கிய வீடியோ வைரலாகி உள்ளது.பாகிஸ்தானில் வரலாறு காணாத மழை காரணமாக அங்கு பெரும்பாலன மாகாணங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மழை வெள்ளம் குறித்து செய்தி சேகரித்த அந்த நிருபர் களத்தின் தீவிரத்தை மக்களுக்கு எடுத்துரைக்க தானே வெள்ள நீரில் குதித்து செய்தி வழங்கியுள்ளார். உயிரை பணயம் வைத்து செய்தி சேகரிப்பது என்பது இது தான். பலர் பாராட்டினாலும் சிலர் இது தேவை தானா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உயிரை பணயம் வைத்து செய்தி வழங்கிய செய்தியாளர் – வைரல் வீடியோ!
