நேபாளத்தில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.ஏற்கனவே கடந்த25ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 147 கி.மீ. தொலைவில், திக்தெல் பகுதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இன்று காலை 7.58 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டரில் 5.5 ஆக பதிவாகி உள்ளது. இதனால், நேபாளம், இந்தியா மற்றும் சீனாவில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதி செய்துள்ளது.சில பகுதிகளில் வீடுகளில் இருந்த மக்கள் அச்சமடைந்து, பாதுகாப்பு தேடி தெருக்களுக்கு ஓடி வந்தனர்.
ஜூலை 25ஆம் தேதி மத்திய நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது. இந்நிலையில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.