• Mon. Jan 20th, 2025

எல்லையில் பயங்கரவாதி சுட்டுக்கொலை!!

ByA.Tamilselvan

Jul 31, 2022

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவுவதும், அவர்களை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொல்வதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இதனால் எல்லைப்பகுதியில் எப்போதும் பாதுகாப்பு பன்மடங்கு போடப்பட்டிருக்கும்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் பட்டான் நகரை சேர்ந்த ஒரு பயங்கரவாதியை பாதுகாப்புபடையினர் சுட்டு கொன்றனர். என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதி தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இர்ஷாத் அகமது பட் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.