

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறந்த தேசியவாதி. மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திய அவரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது- இதனையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கியும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து அவரது எக்ஸ் தளப்பதிவில், ” தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் இன்று. சிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

