• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பல்வேறு துறைகளில் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,

ByS. SRIDHAR

Jul 18, 2026

புதுக்கோட்டையில் பல்வேறு துறைகளில் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது. 721 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மாண்புமிகு முகமது பர்வேஸ் பட்ஜெட் கூட்டத் தொடரில் நடப்பது குறித்து இங்கு விவாதிக்க முடியாது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இங்கு மட்டும் அல்ல தமிழ்நாடு முழுவதும் இருக்கும் வட மாநில தொழிலாளர்கள் குறித்தும் கணக்கெடுக்கப் படுகிறது.
புதிதாக நமது அரசு அமைந்த உடன் அதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சியின் போது நடந்தவற்றை விட்டு விடுங்கள். இப்போது நடக்கும் ஆட்சியில் தொழிலாளர்களிடமிருந்து வரும் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து தொழில்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒரு நல்ல திட்டம் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அது குறித்து அரசுக்கு நானும் 18 திட்டங்களுக்குக் கடிதங்கள் கொடுத்திருக்கிறேன். பல துறை அமைச்சர்களுக்கும் கொடுத்திருக்கிறேன். அரசின் நிதி நிலைமைகளுக்கு ஏற்ப அந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். தொழிலாளர் நலத்துறை சார்பாக பாதிக்கப்பட்டு வரும் பயனாளிகளுக்கு நமது துறையின் சார்பாக மாதம் ரூபாய் 28 ஆயிரம் அளவுக்கு வருமானம் வரும் வகையில் அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறோம். அந்த வகையில் இன்று புதுக்கோட்டையிலும் ஒருவருக்கு வழங்கியிருக்கிறோம்.

இது கடந்த ஆட்சியில் செய்யாத ஒரு பணியாக இருந்தது இப்போது நமது ஆட்சியில் செய்து வருகிறோம். இது போல் எண்ணற்ற பல திட்டங்களையும் செயல்படுத்த இருக்கிறோம். தேர்தல் அறிக்கையில் என்னென்ன சொல்லி இருக்கிறோமோ அதை எல்லாம் நேரம் ஒதுக்கி செயல்படுத்த இருக்கிறோம். வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அது குறித்து நிறைய நீங்கள் பார்க்க இருக்கிறீர்கள். மக்களுக்கு என்ன இடையூறாக இருக்கிறதோ ஏதும் பிரச்சினையாக இருக்கிறதோ அதை எல்லாம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்றைக்கு புதுக்கோட்டையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் நலத்திட்ட உதவிகள் செய்திருக்கிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக பட்டா கேட்டவர்களுக்கு இப்போது நாங்கள் கொடுத்திருக்கிறோம். 200க்கும் மேற்பட்டவர்களுக்கு ரேஷன் கார்டு கொடுத்திருக்கிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கு 15 பேருக்கு மேல் செயற்கைக் கால்கள் வழங்கி இருக்கிறோம். தொழிலாளர் நலத்துறையின் சார்பில் மரணம் அடைந்தவர்கள் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 5 லட்சம் வீதம் பலருக்கு வழங்கி இருக்கிறோம். இதுபோல் பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம் என்றார்.