திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 18 வயதில் இருந்து 80 வயது வரை உள்ள அனைவரின் மனம் கவர்ந்த வெற்றி வேட்பாளராக வலம்வரும் அமைச்சர் ஐ.பெரியசாமி 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஒரு சாதனை வெற்றியை பெறுவார் என்று தொகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் வழங்கிய முதியோர் உதவித் தொகை 15 வருடங்களாக எங்களை உயிருடன் வாழவைத்துள்ளது என்று கூறியபடி அமைச்சர் செல்லுமிடங்களில் முதியோர்கள் அவருக்கு சால்வை அணிவித்து தங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1989-ம் ஆண்டு முதல் இன்று வரை (2026) 37 வருடங்களாக ஒரே தொகுதியில் போட்டியிட்;டு வெற்றிபெற்று வரும் வெற்றி வேட்பாளார் ஐ.பெரியசாமி அவர்கள் தொகுதி மக்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்று வருகிறார்.
பள்ளிச் சிறுவர்கள் பாதுகாப்புடன் கல்வி பயில அங்கன்வாடி மைய கட்டிடங்கள், கல்லூரி மாணவர்கள் உயர் கல்வி கற்க அரசு கல்லூரிகள், மாற்றுத்திறனாளிக்கு தேவைப்படும் உபகரணங்கள், பள்ளி மாணவர்களுக்கு தேவைப்டும் கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்கள், மற்றும் அனைத்து கிராமங்களுக்கும் தார் சாலை வசதி, பாதுகாப்பான குடி தண்ணீர் வழங்க மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி உட்பட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று வழங்கி வருவதால் தொகுதி மக்கள் இவரை தென்பாண்டிச்சிங்கம், ஆத்தூர் தொகுதியின் பாதுகாவலர் மற்றும் ஆத்தூர் தொகுதியின் செல்லப்பிள்ளை என கூறி வருவது வழக்கம் ஆகும்.
கடந்த முறை 2021 சட்டமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து கட்சியினரையும் டெபாசிட் இழக்கச் செய்ததுடன், சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் மகத்தான சாதனை படைத்தார். அதே சாதனை இம்முறையும் தொடரும் என தொகுதி மக்கள் கூறுவதோடு, ஆத்தூர் தொகுதியின் நிரந்தர அமைச்சர் என கூறி வருகின்றனர்.

ஆத்தூர் தொகுதியில் கட்சிக்கு அப்பாற்பட்டு அனைத்து சமுதாய மக்களின் பாதுகாவலராக இருப்பதோடு, அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து செல்வதோடு. அவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு சாதி, சமய, இன வேறுபாடின்றி நிதி உதவியும் செய்து வருவதால் அனைத்து சமுதாய மக்களும் இம்முறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தங்களுடைய ஆதரவை தெரிவிக்க முடிவு செய்து ஆதரவு கடிதமும் கொடுத்து வருகின்றனர்.
சினிமா நடிகர்களிடம்தான் செல்பி எடுக்க கல்லூரி மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் ஆசைப்படுவார்கள். ஆனால் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொள்ளும் அனைத்து விழாக்களிலும், 6 வயது முதல் உள்ள அனைவரும் அவருடன் செல்பி எடுக்க ஆசைப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இப்படி தொகுதி மக்களோடு, மக்களாக எவ்வித பந்தாவும் இல்லாமல் சராசரி மனிதரைப்போல நடந்து கொள்ளும் அமைச்சர் ஐ.பெரியசாமி 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஒரு வரலாற்று சாதனை படைப்பார், இது உறுதி என அனைத்து தரப்பு மக்களாலும் கூறப்படுகிறது.



