• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கொடுத்து கொடுத்து சிவந்த கைகளுக்கு சொந்தகாரர்கள் நாங்கள் – கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் வழியில் கொடுத்து கொடுத்து சிவந்த கைகளுக்கு சொந்தகாரர்கள் நாங்கள் என்றும் அதிமுக தொண்டர்கள் எப்போதுமே ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யக்கூடியவர்கள் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியுள்ளார்.

அதிமுக கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது பிறந்தநாளையொட்டி அவரது குலதெய்வ கோயிலான மூலிப்பட்டி தவசலிங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்து அன்னதானம் வழங்கினார். அதனை தொடர்ந்து சிவகாசி அருகே சாட்சியாபுரம் சி.எஸ்.ஐ ஆதரவற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி, காதுகேளாதோர் பள்ளி மாணவ மாணவிகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கேக்கை வெட்டி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து நாளைய பாரதம் அறக்கட்டளை தொடக்க விழாவில் பங்கேற்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு நேர்ட்டு புத்தகம் வழங்கினார். பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு வெற்றி சான்றிதழ் கேடயம் வழங்கினார்.

தொடர்ந்து மருத்துவ முகாம், லட்சம் மரக்கன்று நடும் விழாவில் பங்கேற்றார் நாளைய பாரதம் லோகோவை வெளியிட்டார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது, ஆதரவற்றோர் காது கேளாதோர் மனவளர்ச்சி குன்றிய மாணவ மாணவிகளுக்கு நாம் செய்யும் தொண்டு இறைவனுக்கு செய்யும் தொண்டாகும். பொதுவாகவே கொடுக்கின்ற கட்சி என்று சொன்னாலே அது அண்ணா திமுக கட்சிதான். ஏழைகளுக்கு கொடுப்பதில் சந்தோசபடக்கூடிய கட்சி அதிமுக. அதிமுகவினர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் வழியில் கொடுத்து கொடுத்து சிவந்த கைகளுக்கு சொந்தகாரர்கள் நாங்கள் என்றும் அதிமுக தொண்டர்கள் எப்போதுமே ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யக்கூடியவர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவின் போது ஒவ்வொறு கிராமத்திலும் அதிமுகவினர் தங்களால் முடிந்த அளவு ஏதாவது ஒரு உதவி செய்வார்கள் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், மாவட்ட கழக துணை செயலாளர் அழகுராணி, சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணகுமார், கருப்பசாமிபாண்டியன், ஷாம் (எ)ராஜஅபினேஸ்வரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், வெங்கடேஷ், கருப்பசாமி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், நாளைய பாரதம் அறக்கட்டளை நிறுவனர் பாலபாலாஜி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் மாரீஸ்குமார், மாவ்ட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் விஜய்ஆனந்த், நடிகர் பிரபாத், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சியார்பட்டி முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாபுராஜ், சித்துராஜபுரம் பாலாஜி, விருதுநகர் ஒன்றியக் கழகச் செயலாளர்கள் தர்மலிங்கம், கண்ணன், மச்சராசா, ராஜபாளையம் ஒன்றியக் கழகச் செயலாளர்கள் குருசாமி, நவரத்தினம், ராஜபாளையம் நகர கழக செயலாளர் பரமசிவம், வக்கீல் துரைமுருகேசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாணடியராஜன், தலைவர் செல்வம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்.ஜி.ஓ.காலனி மாரிமுத்து, சிவகாசி கிழக்கு ஒன்றிய பொருளாளர் கருப்பசாமிபாண்டியன், விருதுநகர் கிழக்கு மாவட்ட மகளிரணி செயலாளா் கலைச்செல்வி, ராஜபாளையம் மகளிரணி ராணி மற்றும் அதிமுகவின் மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.