தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் நா. மரிய வில்சன் அவர்கள் வெளிப்படுத்திய கோபமும், அதனுடன் இணைந்த மதச்சார்புடைய கருத்துக்களும் மாநிலத்தின் அரசியல் பண்பாட்டிற்கே அவமானமாக அமைந்துள்ளன.
பட்ஜெட் விவாதத்தின் போது கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நிதியமைச்சர் தமிழில் பிழையின்றி பேச முயற்சிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இது தமிழ் ஆர்வலர் என்ற முறையில் எழுப்பப்பட்ட நியாயமான விமர்சனமே.

ஆனால் அதற்கு பதிலளித்த அமைச்சர், “நான் பிறப்பால் கிறிஸ்தவன். எனக்கு கிறிஸ்தவம் அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழியை கற்றுக்கொடுத்திருக்கிறது. இது பாதி பேருக்கு எவ்வளவு தமிழ் படித்தாலும் தெரியாது” என்று கூறியது மட்டுமல்லாமல், தனது பேச்சு நடையை யாருக்காகவும் மாற்றமாட்டேன் என்று ஆவேசமாக அறிவித்தார். சபாநாயகரே அவரை அமைதிப்படுத்த வேண்டிய நிலை உருவானது. தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பதவி வகிப்பவர், தமிழை சிறுமை படுத்தியும், இழிவுபடுத்தியும்,தனது மதத்தை உயர்த்திப் பேசுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.இச்செயல் வன்மையாக கண்டிக்கதக்கது.
வேளான் பட்ஜெட் நகலை திருப்பதி கோயிலில் வழிபாடு செய்ததற்காக இது மதநல்லிணக்கத்திற்கு எதிரானது என்று கண்டித்த சு.வெங்கடேசன் எம்பி,திக வீரமணி போன்ற தன்னை தமிழின போராளிகள் என்று கூறிபவர்கள் எல்லாம் இதே மரியவில்சன் சட்டசபைக்கு வரும் போது பட்ஜெட்டுடன் ஜெபமாலை கொண்டும் வரும் போதும்,தற்போது தமிழை விட கிறிஸ்தவம் தான் முக்கியம் என்று பேசியபோதும் சு.வெங்கடேசன் போன்ற வர்கள் எல்லாம் மரியவில்சனை கண்டிக்காதது ஏன்?
தமிழீன ஏய்ப்பாளர்களுக்கு இங்குள்ள இந்து மதம் என்றால் கசக்குது?அன்னிய மதமான கிறிஸ்தவ மதம் என்றால் இனிக்குதா?
தலைமைசெயலகத்தில் கூட்டத்தொடர் நடப்பது சட்டசபையா?அல்லது திருசபையா? தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா?வாடிகன் ஆட்சியா?
ஏனென்றால் சட்டசபையில் வன்னியரசு கிறிஸ்தவ பாடலை பாடுகிறார், சபாநாயகர் கிறிஸ்தவ போதனைகளை கூறுகிறார்,தமிழ்தாய் வாழ்த்து பாடலை முதலில் பாடவேண்டுமென்று தீர்மானம் போட்ட அன்றே ஒரு பள்ளியில் முதலில் கிறிஸ்தவ பாடலை படித்தும் இரண்டாவதாக தமிழ்தாய் வாழ்த்து பாடி உள்ளார் தங்களது அமைச்சர் ஒருவரே தீர்மானத்தை பின்பற்றாமல் தமிழை பின்னுக்கு தள்ளி உள்ளார்.
தவெக எம்எல்ஏக்கள் பலர் கிறிப்டோ கிறிஸ்தவர்களாக இருப்பது போல் சந்தேகம் எழுவதால் அனைவருக்குமான மதசார்பற்ற அரசு என்று கூறிகொள்ளும் தமிழக முதல்வர் திரு.ஜோசப்விஜய் அவர்கள் தமிழக மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
மேலும் சனாதன தர்மமும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருஷார்த்தங்களையும் போதிக்கிறது. ஒவ்வொரு மதமும் அன்பை, இரக்கத்தை, பொறுமையை வலியுறுத்துகிறது. ஆனால் தன் மதம் மட்டும் தான் இவற்றை கற்றுக்கொடுத்தது என்ற உணர்வை உருவாக்குவது மத நல்லிணக்கத்திற்கு எதிரானது. பட்ஜெட் தாக்கல் செய்யும் போது ஜெபமாலையுடன் வந்து சிலுவை அடையாளம் செய்த அமைச்சர், தற்போது தமிழை குறைத்து மதிப்பிடும் வகையில் பேசியிருப்பது தொடர்ச்சியான மதச்சார்பு வெளிப்பாடாகவே தெரிகிறது.
கல்வித்துறையில் 25 முதல் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் என்று அவரே கூறியிருக்கிறார். ஆங்கிலத்தில் பேசுவதற்குப் பழக்கப்பட்டவர் என்பதால் தமிழில் சில பிழைகள் ஏற்படலாம். ஆனால் அதை ஒப்புக்கொண்டு முயற்சி செய்வதற்குப் பதிலாக, தமிழ் படித்தவர்களுக்கே அன்பு தெரியாது என்று சொல்வது ஆணவத்தின் உச்சம். மேலும், சொத்து தகராறில் தனது சொந்த அண்ணன் குடும்பத்தினரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், “அன்பு மொழி” பற்றி பேசுவது இரட்டை வேடமாகவே தென்படுகிறது. சட்டப்பேரவை என்பது அனைத்து மக்களின் பிரதிநிதித்துவ அரங்கம். அங்கு மதத்தை முன்னிறுத்தி தமிழை குறைத்து மதிப்பிட்டு தமிழை இழிவுபடுத்துவது மாநிலத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தானது.
எனவே தமிழக நிதியமைச்சர் பதவி என்பது பொறுப்பானது. கோபத்தைக் கட்டுப்படுத்தி தமிழ்நாட்டின் மொழி, பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை மதிக்கும் மனப்பான்மையை அமைச்சர் உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும்.
அப்படி எதையும் பின்பற்றாமல் இதுபோன்ற நிகழ்வுகள் அரசியல் விவாதங்களை மதரீதியாக மாற்றி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எண்ணத்தோடு தமிழை அவமதித்து தனது கிறிஸ்தவ மதத்தை பெருமை சேர்க்கும் விதமாகவும்,மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிராகவும் தமிழக சட்டசபையில் அமைச்சர் பதவிக்கே தகுதி இல்லாத மதவெறியோடு பேசிய தமிழின விரோதி மரிய வில்சன் அவர்களை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வர் ஜோசப்விஜய் அவர்களை இந்துமக்கள்கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.





