பிரதமர் மோடியை பாஜக தலைவர் அண்ணாமலையுடன் சென்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் சந்தித்துள்ளார்
குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்தின் பிரிவு உபசாரவிழாவில் பிரதமர் நரேந்திரமோடியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துபேசினார். இந்த சந்திப்பின் போது பாரதிஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உடனிருந்தார். ஓபிஎஸ்க்கு ஆதரவாக பாஜக செயல்படுவதாகக் கூறப்படும் நிலையில் ,பிரதமரை தனியே சந்திப்பதற்கு ,இபிஎஸ் முயன்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை உடன் இபிஎஸ் சென்று பிரதமரை சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.