• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி அருகே தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByP.Thangapandi

Aug 13, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சங்கரலிங்காபுரம் அருகில் ஓணான் கரடு பகுதியில் தனியார் கல்குவாரிக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்யக்கோரி பாப்பநாயக்கன்பட்டி, சங்கரலிங்காபுரம், டி.இராமநாதபுரம், செல்லாயிபுரம் என 4 கிராம மக்கள் ஒன்றிணைந்து கிராமங்களில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்த சூழலில்

தொடர்ந்து ஓணான் கரடு பகுதியில் உள்ள கல்குவாரியை 100 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக சென்று கல்குவாரியை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,

இந்நிலையில் இந்த கல்குவாரி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.,

இந்நிலையில் மீண்டும் ஆந்திராவைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற வேறொரு தனியார் நிறுவனத்திற்கு கடந்த மாதம் கல்குவாரி உரிமம் வழங்கியதாக கூறப்படுகிறது இதனை அறிந்து அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று கல்குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.,

இதனால் எழுமலை காவல் ஆய்வாளர் இளவரசு தலைமையிலான 30 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.,

இந்த கல்குவாரி உரிமை வழங்கினால் இந்த மலையை சார்ந்து நீர் நிலைகள், ஓடைகள், 7 க்கு மேற்பட்ட கண்மாய்கள், நீர் சுனைகள், பறவைகள், பட்டு பூச்சிகள், ஊர்வனங்கள், கல்வெட்டுகள் மற்றும் தொல்லியல் எச்சங்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.,

மேலும் இந்த கல்குவாரி உரிமத்தை தமிழக அரசு ரத்து செய்யவில்லை என்றால் அனைத்து கிராம மக்களின் திரட்டி உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.,