• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Feb 10, 2022

குதிரைவாலி அரிசி உப்புமா:

தேவையான பொருட்கள் :
குதிரைவாலி – 1 கப், பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு – 1 கப் பொடியாக நறுக்கியது, இஞ்சி – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 2, வெங்காயம் – 1, உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – 3 கப்
தாளிப்பதற்கு:
எண்ணெய் – 1 தேக்கரண்டி, கடுகு – 1 தேக்கரண்டி, சீரகம் – 1 தேக்கரண்டி, உடைத்த உளுந்து – 1 தேக்கரண்டி, கடலை பருப்பு – 1 தேக்கரண்டி, பெருங்காயம் – 1 சிட்டிகை, கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை :
முதலில் காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குதிரைவாலி அரிசியை 2, 3 முறை கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து வைத்து கொள்ளவும். ஒரு வாணலில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களால் தாளிக்கவும். பின் காய்ந்த மிளகாய், இஞ்சி, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் பொடியாக அரிந்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பின் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து சுத்தம் செய்த குதிரைவாலி அரிசியை போட்டு கிளறவும். வாணலியை மூடி 10 அல்லது 15 நிமிடங்கள் வேக விடவும். தண்ணீர் வடிந்து உப்புமா நன்கு வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும். சூடாக குதிரைவாலி உப்புமாவை சர்க்கரை அல்லது வெல்லத்துடன் பரிமாறவும்.