மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 பாசன கால்வாய் திட்டத்தின் கால்வாய்கள் ஒவ்வொரு முறையும் சோதனை அடிப்படையில் நீர் திறக்கப்படும் போதும் உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாகுவதோடு, அதை சரி செய்யும் வரை நீர் திறப்பும் நிறுத்தி வைக்கப்படும் நிலை நீடிப்பதாகவும், கால்வாய் கரைகளை பலப்படுத்த விவசாயிகள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.,

இதன் அடிப்படையில் 58 கால்வாய் கரைகளை பலப்படுத்த தமிழ்நாடு அரசின் நிதியுடன் நபார்டு வங்கியும் சுமார் 3 கோடி ரூபாய் வழங்கப்பட்டு கால்வாய் கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.,

இந்த பணிகளை மும்பை நபார்டு வங்கியின் பொது மேலாளர் இன்கர்சல் சீஃப், தலைமையிலான வங்கி அதிகாரிகள் இன்று 58 கால்வாயின் தொட்டிப்பாலம், கால்வாய்கள், வைகை அணையில் உள்ள மதகு பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர்.,

இதில் தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடாக உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் மேலாளர்களும் கலந்து கொண்டு ஆசிய கண்டத்தின் இரண்டாவது மிக நீளமான நீர் செல்லும் தொட்டிப்பாலமான 58 கால்வாய் தொட்டிபாலத்தையும், இத்திட்டத்தின் கட்டமைப்பு பணிகள் குறித்து கேட்டறிந்து வியந்து சென்றனர்.,