தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலையில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் மஞ்சுளா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சிறைகளில் மேற்கொள்ளப்படும் வழக்கமான ஆய்வின் ஒரு பகுதியாகவே இந்த ஆய்வு நடைபெற்றதாகவும், சிறையில் உள்ள குறைகள் மற்றும் நிறைகள் குறித்து ஆய்வு செய்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், கைதிகள் துன்புறுத்தப்படுவதாகவும், அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் இருப்பதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதாகத் தங்களுக்குத் தெரியவில்லை எனக் கூறினார்.
தேவைப்படும் பட்சத்தில் சிறையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் மஞ்சுளா தெரிவித்தார்.