• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

சீதளாதேவி மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா..,

ByM.I.MOHAMMED FAROOK

Jun 22, 2026

காரைக்கால் மாவட்டம் கீழக்காசாக்குடி பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு தீமிதி திருவிழாவை ஒட்டி கடந்த 7ம் தேதி பந்தல்கால் முகூர்த்தம், 12ம் தேதி கொடியேற்றம் மற்றும் பூச்சொரிதலுடன் தீமிதி திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. தீமிதி நாளான இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அன்ன வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஆலயத்திலிருந்து ஊர்வலமாக வந்து தீக்குழி அருகே அம்மன் எழுந்தருளியதை அடுத்து தீமிதி திருவிழா நடைபெற்றது. தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்துதீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இத்தமிதி திருவிழாவில் சட்டமன்ற உறுப்பினர் திருமுருகன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓமலிங்கம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 24ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் தீமிதி திருவிழா நிறைவடைய உள்ளது.