• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கலைஞர் கருணாநிதி நினைவஞ்சலி முன்னாள் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் மௌன அஞ்சலி..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டியில் ராஜபாளையம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஒன்றிய செயலாளர் ஆன தங்கபாண்டியன் தலைமையில்

தமிழக முன்னாள் முதல்வரும் திமுகவின் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முகவூர் பெருந்தலைவர் காமராஜர் சிலையிலிருந்து ஊர்வலமாக செட்டியார் பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த திருவருட்சிலைக்கு திமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் ராஜபாளையம் நகர்மன்ற தலைமை பவித்ரா ஷ்யாம் ராஜபாளையம் முன்னாள் யூனியன் சேர்மன் சிங்கராஜ் முன்னாள் யூனியன் வைட் சேர்மன் துறை கருப்பகராஜ் சேத்தூர் பேரூராட்சி சேர்மன் பாலசுப்பிரமணியம் ராஜபாளையம் நகர செயலாளர் மணிகண்ட ராஜா முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பாஸ்கர் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் திமுக நிர்வாகிகளும் கட்சி தொடர்களும் கலந்து கொண்டு மலர் மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.