• Wed. Sep 23rd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

இளைஞர் கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகை போராட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேர்த்தூர் அடுத்துள்ள காமராஜர் நகர் பகுதியில் நேற்றைய முன்தினம் இரவு குடிபோதையில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த நபர்களுக்கிடையே வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது,

இது சம்பந்தமாக தளவாய்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் புகார் மனு மீது ஆய்வாளர் குருவத்தாய் அலட்சியப் படுத்தியதாகவும் ஆகையால் தான் சேத்தூர் பகுதியில் தன் கடையில் இருந்த இளைஞர் மணிகண்டன் என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த தங்கையா மகன் மாணிக்கம் மற்றும் செல்வம் மகன் ஈஸ்வரன் ஆகிய இருவரும் கஞ்சா போதையில் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளனர்.

இந்த நிலையில் கொலை செய்த குற்றவாளிகளுக்கு கைது செய்த போதும் அலட்சியமாக இருந்து கொலைக்கு காரணமாக இருந்த தளவாய்புரம் காவல் நிலைய ஆய்வாளரை பணியிட நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைத்து உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தை கட்சியினர் கம்யூனிஸ்ட் கட்சியினர் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்டு தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சம்பவ இடத்தில் இராஜபாளையம் துணைக் கண்காணிப்பாளர் பஷினா பீவி மற்றும் சேத்தூர் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் ஆகியோர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டும் எந்த ஒரு முன்னேற்றம் ஏற்படாத நிலையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்