• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

பாலா மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி திருமஞ்சன விழா..,

ByKalamegam Viswanathan

Jun 22, 2026

சைவ சமய திருவிழாக்களில் முக்கியமான திருவிழா ஆனி திருமஞ்சன விழா சிவன் கோவிலில் உள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

அவனியாபுரம் பாலமீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தனி சன்னதியில் உள்ள நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிலையில் மதுரை அவனியாபுரம் பகுதியில் பாண்டிய மன்னர்கள் காலத்திய ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த புராதான பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சுமார் ஐந்து அடி உயரமுள்ள நடராஜருக்கு ஆனித் திருமஞ்சன சேவை இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜருக்கு திருமஞ்சனம் ,பால் தயிர், சந்தனம் இளநீர் , பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அவருக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.

இந்த சிறப்பு அபிஷேக ஆராதனையின் போது ஏராளமான பக்தர்கள் திருவாசகம், தேவாரம் மற்றும் நடராஜர் குறித்தும் மனமுருக பாடல்களை பாடி இந்த அபிஷேக ஆராதனையின் போது சுவாமியை தரிசனம் செய்தனர்.

திருக்கோவில் சார்பாக சிவாச்சாரியார் பக்தர்கள் வழங்கிய பால் தயிர் பழம் வெண்ணெய் இப்படியாக பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மற்றும் பூஜை திரவியங்களோடு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தார்.

ஆனித் திருமஞ்சனம் அன்று நடைபெறக்கூடிய இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அவனியாபுரம் மட்டுமன்றி மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்களும் வருகை தந்தனர்.

நடராஜர் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

வருடத்தில் ஒருமுறை மட்டுமே நடைபெறக்கூடிய இந்த ஆணி திருமஞ்சன விழாவின்போது நடராஜரை காண கண் கோடி வேண்டும் என்கின்ற வகையில் வந்திருந்த பக்தர்கள் மெய்சிலிர்த்து நடராஜரை வழங்கியதோடு மட்டுமல்ல கோவில் வளாகத்தில் அமைந்திருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கக் கூடிய அன்னை பால மீனாம்பிகை மற்றும் கல்யாணசுந்தரேஷ்வரர் ஆலயம் வணங்கி விட்டு திருக்கோயில் சார்பாக வழங்கப்பட்ட சந்தனம் புஷ்பம் மற்றும் புளியோதரை உள்ளிட்ட பிரசாதங்களை பக்தர்கள் வாங்கி சென்றனர்.