• Sun. Mar 15th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

வைரவேலுடன் நகரத்தார் காவடி..,

ByS.Ariyanayagam

Jan 28, 2026

நத்தம் வழியாக வைரவேலுடன் நகரத்தார் காவடி சென்றது. திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூச விழாவிற்கு காரைக்குடி நகரத்தார் காவடி குழுவினர் வைரவேலுடன் 350க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து நத்தம் வழியாக பழனி சென்றனர்.

தமிழகத்தில் நகரத்தார் காவடி பிரசித்தி பெற்றதாகும். பார் புகழும் பழனிக்கு சிறப்பு சேர்ப்பதாக இந்த காவடி உள்ளது. பக்தர்கள் பாதயாத்திரையாக காவடியை சுமந்து செல்வார்கள்.

நத்தம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வாணியர் மடத்தில் காவடி மற்றும் வைர வேலுக்கு சிறப்பு பூஜை செய்து, இங்கிருந்து புறப்பட்டனர். தொடர்ந்து திண்டுக்கல் நகர் வழியாக பழனி நோக்கி பாதயாத்திரை செல்கின்றனர். தைப்பூசத்திற்கு மறுநாள் காரைக்குடி நகரத்தார் குழுவினருக்கு என்று தனியாக சிறப்பு பூஜை நடைபெறும். பின்னர் மீண்டும் பழனியில் இருந்து பாதயாத்திரையாகவே ஊர் திரும்புவார்.