• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்லில் பேருந்தில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது – 3 கிலோ கஞ்சா பறிமுதல்..,

Byp Kumar

Oct 23, 2026

திண்டுக்கல்லுக்கு பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் பிரபாகரன், சூரியகலா மற்றும் காவலர்கள் பேருந்து நிலைய பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது,

ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு வந்த பேருந்தில் இறங்கிய மேற்கு மரியானாதபுரத்தை சேர்ந்த சுரேந்திரன்(25), நாகராஜ்(35) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்கள் பையில் இருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருவரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி ரயில் மூலம் ஈரோடு வந்து அங்கிருந்து பேருந்து மூலம் திண்டுக்கல் கடத்தி வந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.