திண்டுக்கல் மாநகரின் மையப் பகுதியில் மலைக்கோட்டை அமைந்துள்ளது. அங்கு அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் ஆலயம் இருந்தது. திப்பு சுல்தான் ஆட்சிக் காலத்தில் பக்தர்கள் என்ற பெயரில் மலைக்கோட்டைக்கு ஒற்றர்கள் வரலாம் எனக் கூறி அங்கிருந்த அபிராமி அம்மன் திண்டுக்கல் நகர் பகுதியில் இருக்கும் ஞானாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் ஆலயத்தில் வைக்கப்பட்டது.
அன்றிலிருந்து தற்போது வரை அபிராமி அம்மன் ஆலயம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. சுமார் 400 ஆண்டுகால பழமை வாய்ந்த இந்த கோயிலில் இரு அம்மன்கள் அருள்பாலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கோவில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருப்பதாக கூறி 2013 அதிமுக ஆட்சிக்காலத்தில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் இருந்த சிலைகள் தூண்கள் ஆகியவை அகற்றப்பட்டு புணரமைப்பு பணிகள் தொடங்கின.
2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த எஸ்எம் ராஜா என்பவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு அபிராமி அம்மன் கோவிலுக்கு வந்துள்ள அப்போது கோவிலில் இருந்த சிலைகள் தூண்கள் அம்மனின் வாகனங்கள் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதை அடுத்து இந்து சமய அறநிலையத்துறை இடம் ஆர்டிஐ மூலம் பல ஆவணங்களை கேட்டு பெற்றார்.

மேலும் ஏற்கனவே தான் வைத்திருந்த புகைப்படங்களையும் தற்போது வைத்திருக்கும் புகைப்படங்களையும் பார்த்தபோது கருடாழ்வார் சிலை, அன்னவாகன,ம் குதிரை வாகனம், சிம்மவாகனம் உள்ளிட்ட அம்மனின் வாகனங்கள், கோவிலின் அருகே இருந்த வன்னி மரம் ஆகியவை மாயமாகி இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் கோவில் ஊழியர்கள் அதிகாரிகள் ஆதரவோடு அங்கிருந்த சிலைகளை திண்டுக்கல்லை சேர்ந்த பல கோடீஸ்வரர்களுக்கு விற்பனை செய்ததாக சொல்லப்படுகிறது. மேலும் கோவிலில் இருந்த தூண்களை மில் ஒன்றுக்கு அனுப்பி அங்கு கோயில் கட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என திண்டுக்கல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ராஜா மனு அளித்துள்ளார்.
ஆனால் போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என சொல்லப்படுகிறது. இதை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராஜா வழக்கு தொடர்ந்த நிலையில் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நவம்பர் 23ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை அடுத்து இன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஆஜரான ராஜா தன்னிடம் இருந்த ஆவணங்கள் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை ஒப்படைத்து வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர் போலீசார்.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது. கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டபோது தற்காலிகமாக தயாரிக்கப்பட்ட அத்திமர அம்மன் சிலை பிரபல கோடீஸ்வரர் ஒருவருக்கு விற்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் அம்மனின் வாகனங்கள் மாயமான செய்தி வெளியானதும் 10 வாகனங்களில் ஒரு வாகனம் மட்டுமே கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒன்பது வாகனங்களும் மாயமாகியுள்ளது.

மேலும் காளஹஸ்தீஸ்வரர் கழுத்தில் இருந்த தங்க கவசத்துடன் இணைந்த ருத்ராட்ச மாலையை அர்ச்சகர் குருநாதன் கழுத்தில் அணிந்திருந்த புகைப்படங்களும் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயிலர் படப் பாணியில் சிலை கடத்தல் நடைபெற்று இருப்பதாக எஸ் எம் ராஜா புகார் அளித்திருக்கும் நிலையில் உரிய விசாரணை நடத்தி இதற்கு பின்னால் உள்ள குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதை அனைவரின் கோரிக்கை