திண்டுக்கல் ரவுண்ட் ரோடு புதூர் பகுதியில் ஜும்மா பள்ளிவாசல் ஆனது அமைந்துள்ளது இந்த பள்ளி வாசலில் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி குழு சார்பாக மத நல்லிணக்க கந்தூரி விழாவானது நடத்தப்படும் .

இந்த ஆண்டும் மிலாடி நபியை முன்னிட்டு சுமார் 1600 கிலோ அரிசி, 600 கிலோ கத்தரிக்காய், 100 கிலோ கறி ,75 கிலோ இஞ்சி ,75 கிலோ பூண்டு ,150 கிலோ தக்காளி ,150 கிலோ சின்ன வெங்காயம் ஆகிய உணவுப் பொருட்களை கொண்டு சுமார் 10,000 நபர்கள் பயனடையும் விதத்தில் 27 அடுப்புகள் கொண்டு மெகா கந்தூரி தயாரிக்கும் பணியானது விடிய விடிய நடைபெற்றது .

இந்த கந்தூரி விழாவில் காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் இந்த தந்தூரி விழாவில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என மும்மதத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று கந்தூரியை பெற்றுச்சென்றனர்.