• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கோழிப்பண்ணையில் பதுக்கிய ரூ.32 கோடி பறிமுதல்

Byவிஷா

Apr 9, 2024

பொள்ளாச்சியில் கோழிப்பண்ணை ஒன்றில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில், ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொள்ளாச்சியில் உள்ள பிரபல கோழிப்பண்ணையின் தலைமை அலுவலகம் உள்பட 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கோயம்பத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஊஞ்சாவேலம்பட்டியின் வெங்கடேச காலனியில் இதன் தலைமையகம் உள்ளது.
இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரி சக்திவேல் தலைமையிலான குழுவினர், அவர்களது அலுவலகம், பண்ணை உள்ளிட்ட நான்கு இடங்களில் விடிய விடிய சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இதுவரை, அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ. 32 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் சோதனைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.32 கோடி பாதுகாப்பு காரணங்களுக்காக பொள்ளாச்சியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.