• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

அடுத்த மாதம் டாஸ்மாக் பார் டெண்டர் வருகிறது -கோவையில் அமைச்சர் விக்னேஷ் பேட்டி..,

BySeenu

Sep 26, 2026

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கிட்டின் 377 பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் விழா கோவை சுந்தராபுரம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் மேடையில் இருந்து கீழே சென்று பயனாளிகளுக்கு பட்டா வழங்கினர். 30 ஆண்காலமாக பட்டா பெறுவதற்கு காத்திருந்த பயனாளிகள் பட்டாக்களை பெற்று மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் விக்னேஷ் கூறியதாவது :
தனது தொகுதியில் 31 ஆண்டுகளாக பட்டா பெற முடியாமல் இருந்த சுமார் 377 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை, வசூல்,முறைகேடு குறித்து புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மாதம் பார் டெண்டர் வந்துரும், இளைஞர்கள் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்படும் என்று பேசினார்.