• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

“கோழி கூண்டு திருட முடியாததால் 2 கோழிகளுடன் தப்பியோடிய வாலிபர்கள்..,

BySeenu

Sep 26, 2026

கோவை, ராமநாதபுரம் பகுதியில் பிராய்லர் கோழிக்கடையின் கூண்டை திருட முயன்று, அது முடியாததால், பக்கத்துக் கடையில் இருந்த 2 கோழிகளை மட்டும் திருடிக் கொண்டு வாலிபர்கள் தப்பியோடிய நகைச்சுவையான சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை, ராமநாதபுரம் பிரதான சாலையில் இயங்கி வரும் பிராய்லர் கோழிக்கடை ஒன்றின் முன்பாக, நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் உலா வந்து உள்ளனர்.
​அப்போது கடைக் கதவின் அருகே வைக்கப்பட்டு இருந்த இரும்பிலான பெரிய கோழிக்கூண்டை தூக்கிக் கொண்டு தப்பியோட முயன்று உள்ளனர். ஆனால், கூண்டின் எடை அதிகமாக இருந்ததாலும், சரியான பிடிமானம் கிடைக்காததாலும் அவர்களால் கூண்டை தூக்க முடியாமல் கைவிட்டு உள்ளனர்.

கூண்டை திருட முடியாத ஆத்திரத்தில் இருந்த அந்த வாலிபர்கள், உடனடியாக அருகே இருந்த மற்றொரு கோழிக்கடைக்குச் சென்று உள்ளனர். அங்கு வைக்கப்பட்டு இருந்த கூண்டிற்குள் இருந்த 2 பிராய்லர் கோழிகளை மட்டும் நைசாகத் திருடி, தாங்கள் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடினர்.

​காலையில் கடை உரிமையாளர்கள் வந்து பார்த்த போது கோழிகள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதை அடுத்து கடையின் அருகே பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, வாலிபர்களின் இந்த விசித்திரத் திருட்டு விளையாட்டு வெளிச்சத்திற்கு வந்தது.