• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கோவில் திருவிழாவில் அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல் -கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்

Byதரணி

Apr 9, 2023

சிவகாசி, திருத்தங்கல் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்
மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.
சிவகாசியிலும், திருத்தங்கல்லிலும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவினை முன்னிட்டு தினமும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. நேற்று பொங்கல் திருவிழா நடைபெற்றது. இன்று திங்கள்கிழமை கயறு குத்து திருவிழா நடைபெறுகின்றது. பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சிவகாசி மாநகர அதிமுக சார்பாக பஸ் ஸ்டாண்டு, சிவகாசி சிவன் கோயில் அருகிலும் சிவகாசி கிழக்கு ஒன்றிய கழகம் சார்பாக மாரியம்மன் கோயில் அருகிலும் திருத்தங்கல்லில் மாநகர பகுதி கழகம் சார்பாக முருகன் கோயில் அருகிலும் வடக்கு ரதவீதியிலும் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. நீர், மோர் பந்தலை கழக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி பழம், லெமன் ஜூஸ், மோர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய்ஆனந்த், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பிலிப்வாசு, மாவட்ட பொருளாளர் தேன்ராஜன், சிவகாசி மாநகர பகுதி கழக செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமிபாண்டியன், சரவணக்குமார், சாம்(எ)ராஜ அபினேஷ்வரன், சிவகாசி ஒன்றிய கழக செயலாளர்கள் கருப்பசாமி, ஆரோக்கியம், வெங்கடேஷ், லட்சுமிநாராயணன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சுபாஷினி, தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம், பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி, கவுன்சிலர்கள் கரைமுருகன், ஜெகத்சிங்பிரபு, சுடர்வள்ளி சசிக்குமார். திருத்தங்கல் கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா, தலைமை கழக பேச்சாளர் சின்னதம்பி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்.ஜி.ஓ காலனி மாரிமுத்து, சிவகாசி மேற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பால்பாண்டி, சிவகாசி ஒன்றிய கழக இணை செயலாளர் இளநீர் செல்வம், நகர தகவல் தொழில் நுட்ப பிரிவு மாயாண்டி, சிவகாசி ஒன்றிய இளைஞரணி செயலாளர் கே.டி.சங்கர், நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.