அ.தி.மு.க. இன்னும் எழுச்சியோடுதான் இருக்கிறது!
எடப்பாடியார் தலைமைக்கு
மக்கள் தந்த அங்கீகாரமே
இடைத்தேர்தல் வாக்குகள்!

ஒரு கோடி தொண்டர்களின்
ஒற்றைத் தலைமை எடப்பாடியார்!
வேறொரு தலைமைக்கு
அ.தி.மு.க.வில் இடமில்லை!
எடப்பாடியாருக்குக் கட்டளையிட
யாருக்கும் அதிகாரமில்லை!
தலைமைப் பண்பின் அடையாளம்
எடப்பாடியார் என்பதே
தொண்டர்களின் முழக்கம்!
அ.தி.மு.க.விலிருந்து
த.வெ.க.வுக்குத் தாவியவர்கள்
இன்று நிம்மதியாக இருக்கிறார்களா?

விஜயை நம்பி
அ.தி.மு.க.விலிருந்து சென்றவர்கள்…
வீணாகிப் போவார்கள்!
உண்மையான தொண்டர்கள்
எடப்பாடியார் பக்கமே நிற்கிறார்கள்!
கட்சியை விட்டுச் சென்றவர்கள்
மீண்டும் திரும்பும் காலமும் வரும்!
த.வெ.க. இடைத்தேர்தலில் பெற்றவை
மிரட்டிப் பெற்ற வாக்குகள்!
ஆளும் கட்சி என்ற ஆத்திரத்தில்,
“போட்டுத் தொலைப்போம்!” என்ற வெறுப்பில் விசிலுக்கு
விழுந்த வாக்குகள்!
அரிசி முதல் அத்தியாவசியப் பொருட்கள் வரை
விலைவாசி உயர்ந்துவிட்டது!
இதுதான் த.வெ.க.வின் சாதனையா?
விஜய் பின்னடைவைச் சந்திப்பாரா?
காலம்தான் பதில் சொல்லும்!

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்…
தொண்டர்களின் நம்பிக்கையும்,
கட்சியின் ஒற்றுமையும்,
தலைமையின் உறுதியும்தான்
எந்தக் கட்சிக்கும் உண்மையான பலம்!
எடப்பாடியார் தலைமையில்
அ.தி.மு.க.வின் அடுத்த அத்தியாயம்
வலிமையோடு தொடரும்!
-கே.டி.ராஜேந்திரபாலாஜி



