ரோல்ஸ்-ராய்ஸ் மோட்டார் கார்ஸ் நிறுவனம் சென்னை மீனம்பாக்கத்தில் தனது புதிய சொகுசு விற்பனையகத்தை திறந்துள்ளது. இதன்மூலம் அந்நிறுவனத்தின் உலகளாவிய காட்சி அடையாளத்தை இந்தியாவின் மிகவும் துடிப்பான நகரங்களில் ஒன்றான சென்னையில் திறந்துள்ளது.

ரோல்ஸ்-ராய்ஸ் மோட்டார் கார்ஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் பிராண்ட் இயக்குனர் ஜூலியன் ஜென்கின்ஸ் இதன் திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.
இந்த புதிய விற்பனையகம், ரோல்ஸ்-ராய்ஸ் மோட்டார் கார்ஸ் நிறுவனத்தின் நீண்டகால சந்தைகளில் ஒன்றான இந்தியாவின் மீதான அதன் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் என கூறப்படுகிறது.

சென்னை மற்றும் தென்னிந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்காக, பிரத்யேக தேவைகளுக்கேற்ப கார்களை வடிவமைத்து உருவாக்கும் சேவைக்கான ஒரு சிறப்பான சூழல் கொண்ட ஷோரூமாக இது அமைந்துள்ளது.

ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவன வரலாற்றில் இந்தியா ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ளது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, இந்திய வாடிக்கையாளர்கள் இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் சிறப்பான மற்றும் கற்பனை வளம் மிக்க கார்களை தங்களுக்கு ஏற்றவாறு வடிவமைத்து பெற்று வந்துள்ளனர். இதன் மூலம் தனித்துவம் மற்றும் சுய வெளிப்பாட்டின் ஒரு பாரம்பரியத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர். அது இன்றும் தொடர்கிறது. இப்பகுதி முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவையளிப்பதில் ‘ரோல்ஸ்-ராய்ஸ் மோட்டார் கார்ஸ் சென்னை’ முக்கிய பங்காற்றியுள்ளது.இந்த புதிய விற்பனையகம் எங்கள் நிறுவனத்திற்கும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.
காரினுள் உள்ள மரவேலைப்பாடுகல் ஒவ்வொரு காருக்கும் ஒரு மரத்தில் இருந்து செய்யப்படுவதாக தெரிவித்தார்.
ஒரு காருக்கு முன்பதிவு செய்து 8-10 மாதங்களுக்குள் கார் வாடிக்கையாளரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.



