• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பண்டிகை காலங்களில் அரசு போதுமான பேருந்துகளை இயக்கவில்லை ஆர்.பி. உதயகுமார் கடும் கண்டனம்..,

ByKalamegam Viswanathan

Oct 16, 2026

மக்கள் சென்னையிலிருந்து தீபாவளி பொங்கல் பண்டிகளுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதன்படி வருகிற 19-ம் தேதி ஆயுத பூஜை ,20 ஆம் தேதி விஜயதசமி பண்டிகளை கொண்டாடப்படுவதற்கு 17ஆம் தேதி சனிக்கிழமை முதல் தேதி செவ்வாய்க்கிழமை வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதாக பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்கள்.

அரசு போதுமான பேருந்து வசதிகளை செய்வது வழக்கம் அது தற்போது முழுமையாக மக்களுக்கு பயன்பெறாத காரணத்தினால், ஆம்னி பஸ்ஸின் கட்டணம் உயர்ந்துள்ளது. ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை, விமானத்தில் பல மடங்கு விமான கட்டணம் உயர்ந்து இருக்கிறது.

குறிப்பாக ஆம்னி பேருந்து பஸ் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது ஆம்னி பஸ்களில் வழக்கத்துக்கு அதிகமாக வாங்கும் கட்டணத்தை விட6 முதல் 8 மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி அரசு பேருந்து கட்டணத்தை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது ஆம்னி பேருந்து கட்டணம் 12 முதல் 14 மடங்கு உயர்ந்துள்ளது.

சென்னையில் இருந்து அரசு பேருந்து மற்றும் தற்போது ஆம்னி பேருந்தில் விழா கால கட்டணங்களை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது ,சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு அரசு பேருந்து கட்டணம் 579 ரூபாய் ,ஆம்னி பேருந்து 600 ரூபாய், தற்போது ஆம்னி பேருந்தில் விழாகால கட்டணமாக 3,759 ரூபாய் வாங்கப்படுகிறது .

சென்னை இருந்து நெல்லைக்கு அரசு பேருந்து 514 ரூபாய், ஆம்னி பேருந்தில் 550 ரூபாய் வாங்கப்பட்டது தற்போது ஆம்னி பேருந்தில் விழாகால கட்டணமாக 3,759 ரூபாய் வாங்கப்படுகிறது.

சென்னை, தூத்துக்குடிக்கு அரசு பேருந்தில் 491 ரூபாய், ஆம்னி பேருந்தில் 550 ரூபாய், தற்பொழுது ஆம்னி பேருந்தில் விழாகால கட்டணமாக 3,618 ரூபாய் வாங்கப்படுகிறது. சென்னை, மதுரைக்கு அரசு பேருந்தில் 383 ரூபாய், ஆம்னி பேருந்தில் 500 ரூபாய், தற்போது ஆம்னிபேருந்தில் விழாகால கட்டணமாக 3,999 ரூபாய் வாங்கப்படுகிறது.

சென்னை,திருச்சிக்கு அரசு பேருந்தில் 229 ரூபாய் ,ஆம்னி பேருந்தில் 450 ரூபாய் இருந்தது. தற்போது ஆம்னி பேருந்தில் விழாக் கால கட்டணமாக 3,999 ரூபாய் வாங்கப்படுகிறது. சென்னை, கோவைக்கு அரசு பேருந்து கட்டணம் 415 ரூபாய்,ஆம்னி பேருந்தில் 500 ரூபாய் வாங்கப்பட்டது. தற்போது ஆம்னி பேருந்தில் விழாகால கட்டணமாக 3,810 ரூபாய் வாங்கப்படுகிறது சென்னை, சேலத்திற்கு அரசு பேருந்தில் 274 ரூபாய், ஆம்னி பேருந்தில் 400 ரூபாய் வாங்கப்படுகிறது .ஆம்னி பேருந்தில் விழாகால கட்டணமாக 3,999 ரூபாய் வாங்கப்படுகிறது.

சென்னை ஈரோட்டிற்கு அரசு பேருந்து 329 ரூபாய் வாங்கப்படுகிறது. ஆம்னி பேருந்தில் 500 ரூபாய் வாங்கப்படுகிறது தற்போது ஆம்னி பேருந்தில் விழாக்கால கட்டணமாக 3,999 ரூபாய் வாங்கப்படுகிறது .

அதேபோல் விமானத்தை எடுத்துக் கொண்டால் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சாதாரண நாட்களில் 7,157 ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது 17,100 கட்டணமாக வாங்கப்படுகிறது. சென்னை ,மதுரைக்கு சாதாரண நாட்களில் 5137 ரூபாய் வாங்கப்பட்டது தற்பொழுது 22,783 ரூபாய் காணப்படுகிறது .

சென்னை திருச்சிக்கு சாதாரண நாட்களில் 4,803 ரூபாய் வழங்கப்பட்டது தற்போது 18,749 ரூபாய் கட்டணமாக வாங்கப்படுகிறது .சென்னை கோவைக்கு சாதாரண நாட்களில் 4,996 வழங்கப்பட்டது. தற்பொழுது 16,234 ரூபாய் வாங்கப்படுகிறது. சென்னை சேலத்திற்கு சாதாரண நாட்களில் 4000 ரூபாய் வாங்கப்பட்டது. தற்பொழுது 12,132 ரூபாய் கட்டணமாக வாங்கப்படுகிறது.

அரசு தேவையான அளவில் கூடுதல் பேருந்துகளை வழங்க முன்கூட்டியே ஆய்வு செய்து அதற்காக கூடுதல் பேருந்து விட்டிருந்தால் மக்கள் ஆம்னி பகுதிகளில், விமானங்களில், ரயில்களில் இப்படி அவசரமாக போக மக்களுக்கு கட்டாயம் ஏற்பட்டிருக்காது அவசியமாக மக்கள் போக வேண்டிய காரணமாக இருப்பதால் தற்போது கட்டணம் உயர்ந்துள்ளது தற்போது போக்குவரத்துறை அமைச்சரின் அறிக்கை பலனளிக்கவில்லை .

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டது.தென் மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது மதுரை ஒருநாள் மழைக்கே தத்தளித்தது.ஒருபுறம் வடகிழக்கு பருவமழை, இன்னொரு புறம் விலைவாசி உயர்வு ,இன்னொரு புறம் போக்குவரத்து வசதி இல்லை தவெக அரசுக்கு புரியுதா என்பது சந்தேகமாக இருக்கிறது .

ஏனென்றால் வரலாற்றில் ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்து அதை நியாயப்படுத்தும் முயற்சி செய்கிறார்கள் .விலைவாசி உயர்வு என்று சொன்னால் அமைச்சர் அதற்குரிய பதிலை சொல்ல மறுக்கிறார் அதை நியாயப்படுத்துகிறார் .விலைவாசி உயர்வு குறித்து சட்டமன்றத்தில் எடப்பாடியார் கூறிய போது தவெக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? எதுவும் எடுக்கவில்லை.

தற்பொழுது ஆயிரம் ஏசி பஸ் டெண்டர் ரத்து ,அதேபோல தீபாவளி முன்னிட்டு ரேஷன் கடையில் வழங்க பாமாயில் ஆயில் வழங்க, 60 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகளை விநியோகயம் செய்ய கொள்முதல் செய்ய நான்கு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டது பதில் நுகர்வோர் வாணிப கழகம் கொள்முதல் விலையை முறையாக குறிப்பிடவில்லை என்று கூறிவிட்டு ஒரு குறிப்பிட்ட நிறுவனங்கள் அதிகப்படியான பாக்கெட்டைகளை கொள்முதல் பெறுவது செய்வது குறித்து நீதிமன்றத்தில் முறையீடு வந்தது இதனை தொடர்ந்து நீதிமன்றம் இடைக்கால தலைவிதித்தது.

தொடர்ந்து அரசாணைகளை வெளியிடுவது அதை ரத்து செய்வது திடீரென்று மதுக்கடையில் 11 மது வகைகளுக்கு தடை செய்வது, பிறகு அதை வாங்கலாம் என்று உத்தரவு போடுவது.அதேபோல கடந்த நான்கு மாதங்களில் புதிதாக பதவி போடுவது, அதற்குரிய அரசாணைகளை வெளியிடுவதில்லை . தற்போது அறங்காவலர் நியமனத்தில் கூட வெளிப்படுத்த தன்மை இல்லை.

இது 4 மாதம் முதல்வர் கோயில் கோவிலாக செல்கிறார் இந்த நான்கு மாத காலத்தில் தவெக அரசு அரசாணை வெளியிடுவது அதை வாபஸ் பெறுவது, ரத்து செய்வது. டெண்டர்களை வெளியிடுவது, ரத்து செய்வது, தள்ளி வைப்பது இதில் தான் இந்த ஐந்து மாதத்தில் அரசு வரலாற்று சாதனையை செய்துள்ளது .இதுதான் ஐந்து ஆண்டுகள் தொடருமா என்ற கவலை ஏற்பட்டுள்ளது .

அரசாணை என்பது ஒரு உறுதியான முடிவாக இருக்க வேண்டும் என் என்பது மக்கள் எதிர்பார்ப்பு .மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமாக தவெக அரசு. இதற்குரிய அறிவுரையை முதலமைச்சர் வழங்குவாரா? ஆய்வு நடத்துவாரா? எடுத்தால் நாட்டுக்கு நல்லது எடுக்கவில்லை என்றால் மக்களே தக்க பதில் சொல்லுவார்கள் என கூறினார்.