மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கோவில்களில் நவராத்திரி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.,

இதில் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட மேலப்புதூரில் அமைந்துள்ள பழமையான பத்ரகாளியம்மன் கோவிலில் பூஜைகள் நடைபெற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.,
இதில் பத்ரகாளியம்மனுக்கு பால்,தயிர்,சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தன.,

கொலுவில் சரஸ்வதி, பார்வதி, பரமசிவன்,விநாயகர் உள்ளிட்ட பல்வேறு திருவுருவ விக்கிரகங்கள் வைக்கப்பட்ட கொழுவிற்கு பூஜைகள் நடைபெற்றது.,
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.,

இதே போன்று உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகரில் அமைந்துள்ள தேவி கருமாரியம்மன் கோவில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது., தொடர்ந்து வைக்கப்பட்ட கொழுவிற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.,
நவராத்திரி வெள்ளிக்கிழமை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட கொழு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது.,
இதேபோன்று மாதரை கிராமத்தில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.,



