உள்ளாட்சி தேர்தல் வருவதை முன்னிட்டு பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை அறிய புதிய திட்டத்தை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் அறிமுகப்படுத்தினார்

தேனி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இன்று பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன் ஒவ்வொரு பகுதியாக சென்று பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கவும், அவர்களின் புகார்களை பெறுவதற்கும் விண்ணப்ப படிவத்தை அறிமுகம் செய்து பொதுமக்களிடம் வழங்கினார்.

குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு, கழிவு நீர் கால்வாய், மழைநீர் வடிகால், மருத்துவ வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து இந்த படிவத்தில் பூர்த்தி செய்து அதனை புகாராக கூறலாம் என தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து பெரியகுளம் எம்எல்ஏ சபரி ஐங்கரன் கூறுகையில்,

பொதுமக்கள் குறைகளை கேட்டு அதற்கு தீர்வு காண்பதற்கு விண்ணப்ப படிவத்தை அறிமுகம் செய்துள்ளோம்.
தற்போது முதல் கட்டமாக தேனி நகராட்சிக்குட்பட்ட 1 2 மற்றும் 3வது வார்டு பகுதியில் இந்த விண்ணப்ப படிவங்களை தங்களது கட்சி பொறுப்பாளர்கள் மூலமாக பொதுமக்களின் இல்லத்திற்கு நேரடியாக சென்று வழங்கி வருகிறோம்.
பொதுமக்கள் பிரச்சனைகளை விண்ணப்ப படிவங்களில் பூர்த்தி செய்து அதனை அந்தந்த பகுதி பொறுப்பாளர்களே பெற்று அதற்கான பிரச்சனைகள் குறித்து தீர்வு காணப்படும்.

பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியை ஒரு முன்மாதிரியான தொகுதியாக மாற்ற வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என தெரிவித்தார்.



