• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இரட்டை இலையில் தான் போட்டி- ஜெயக்குமார் தகவல்

ByA.Tamilselvan

Jan 20, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடும் என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட்ட நிலையில், தற்போதைய இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறது. இந்நிலையில், இரட்டை இலை சின்ன விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. நிச்சயம் இரட்டை இலையில் தான் போட்டி என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.