• Tue. Jun 17th, 2025
[smartslider3 slider="7"]

பாலபிரஜாபதி அடிகளரின் பவளவிழா- சபாநாயகர் பங்கேற்பு

பாலபிரஜாபதி அடிகளரின் பவளவிழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு பங்கேற்றார்.
சாமிதோப்பு அய்யா வழி,வழிபாட்டின் குருமகா சன்னிதானம் பாலபிரஜாபதி அடிகளரின் பவளவிழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் கலந்துகொண்டு சிறப்பித்தார். மகா சன்னிதானத்திற்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்த சபாநாயகர் அப்பாவுக்கும் இன்று பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சபாநாயகர் அப்பாவுக்கும் அடிகளாரும் பிறந்த நாள் வாழ்த்துகளை பரஸ்பரம் தெரிவித்துக்கொண்டதை பார்த்த கூடி நின்றவர்களும் கை தட்டி மகிழ்ச்சியுடன் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.