• Mon. May 11th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

பாஜக எம்.பி.க்கு எதிராக வலுக்கும் போராட்டம்!!

ByA.Tamilselvan

Jan 20, 2023

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எழுந்துள்ள பாலியல் புகார் தொடர்பாக போராட்டம் வலுத்து வருகிறது.
பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவரால் தேசிய பயிற்சி முகாம்களில் நியமிக்கப்பட்ட சில பயிற்சியாளர்கள், பல ஆண்டுகளாக பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றனர் என்ற குற்றசாட்டும் எழுந்துள்ளது.
இந்த போராட்டத்தில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக் போன்றவர்கள் பங்கேற்றுள்ளனர். மல்யுத்த வீரர்கள் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்துள்ளனர் என்றும், அதனால் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு எடுக்கும் ஒருதலைப்பட்சமான முடிவுகளை பார்த்துக் கொண்டு இனி அமைதியாக இருக்க மாட்டோம் என்று அதிரடியாக தெரிவித்துள்ளனர். இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் அனைவரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை, இந்திய மல்யுத்த கூட்டமைப்பால் சிறப்பாக நடத்தப்படும் தேசிய அல்லது சர்வதேச போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என முடிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு மூன்று பேர் கொண்ட குழு அமைக்க உள்ளது. அந்த குழுவில் இரண்டு பெண் பிரதிநிதிகள் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.