• Fri. Mar 6th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு – கமல்ஹாசன் ஆதங்கம்

Byமதி

Oct 10, 2021

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் 73.27% வாக்குப்பதிவாகியுள்ளதாக மாநில தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், அய்யப்பன்தாங்கலில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் ஸ்ரீதேவி என்பவரின் வாக்கு கள்ள ஓட்டாக ஏற்கனவே பதிவாகி இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மநீம வேட்பாளர் அரவிந்த் கிருஷ்ணாவின் போராட்டத்திற்குப் பிறகே ஸ்ரீதேவிக்கு சேலஞ்ச் ஓட்டளிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர், வாக்குச்சுத்தம் சொல்லிலும் இல்லை, செயலிலும் இல்லை என்று தனது பதிவில் கூறியுள்ளார்.