• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

தூக்கில் தொங்கிய ஆண் பிணம்., கொலையா? தற்கொலையா?

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி குரங்கு தோப்பு பகுதி யில் நேற்று மாலை 4 மணிக்கு 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் லைட் பச்சை நிறமுழுக்கை சட்டையும், அடர் பச்சை வெள்ளைநிறத்தில் கட்டம் போட்ட கைலியும் அணிந்த நிலையில் வாகை மரத்தில் நைலான் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

அவர் யார் எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. இது பற்றி தகவல் அறிந்த வாடிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந் து சென்று விசாரணை செய்தனர். அப்போது அவரது சட்டை பையில் திருநெல்வேலியில் இருந்து விருதுநகருக்கு வந்த ரயில் டிக்கெட் மட்டும் இருந்தது.திருநெல்வேலியில் இருந்து விருதுநகருக்கு வந்தவர் வாடிப்பட்டிக்கு ஏன் வந்தார்? எப்படி வந்தார்? என்றும், எதற்காக தூக்கில் தொங்கினார் என்றும். இது கொலையா தற்கொலையா என்று தெரியவில்லை . இதுகுறித்து குலசேகரன் கோட்டை கிராம நிர்வாக அலுவலர் கோபால கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் கணேசன் சப் இன்ஸ்பெக்டர் திவ்யா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.