தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிவள்ல் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.
இந்த தேர்தலில் 73.27% வாக்குப்பதிவாகியுள்ளதாக மாநில தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் மாவட்டவாரியாக வாக்குப்பதிவு,
காஞ்சிபுரம் 72%, செங்கல்பட்டு 70%, விழுப்புரம் 83.6%, கள்ளக்குறிச்சி 82%, வேலூர் 68%, ராணிப்பேட்டை 75.3%, திருப்பத்தூர் 73.5%, திருநெல்வேலி 65%, தென்காசி 70% என மொத்தம் 73.27% வாக்குப்பதிவாகி உள்ளது.