• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

செவாலியர் அகாடமி பள்ளியில் மாணவர்களுக்கு இலவச கோடைகால பயிற்சி..,

ByS.Ariyanayagam

Apr 27, 2026

திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச கோடைகால பயிற்சி நடந்தது.
இந்த பயிற்சி முகாமை பள்ளி தாளாளர் சேசு ஆரோக்கியம் துவக்கி வைத்தார். பள்ளி நிர்வாக அதிகாரி ஜான் பிரிட்டோ முன்னிலை வகித்தார்.

பள்ளி துணை முதல்வர் ஞானசீலா அனைவரையும் வரவேற்றார். இதில் பள்ளி தாளாளர் சேசு ஆரோக்கியம் பேசியதாவது:
செவாலியர் அகாடமி பள்ளியில் மாணவர்கள் புத்துணர்ச்சி பெற இலவச கோடை கால பயிற்சி முகாம் துவக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று முதல் 11ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் பங்கேற்று சிறப்பு பெறலாம். வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் பங்கேற்று பயன்பெறலாம். கவலை மறந்து, மன அழுத்தமின்றி மாணவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். அதே நேரத்தில் நகைச்சுவையாகவும், மூளைக்கும், உடலுக்கும் வேலை தருகின்ற பயிற்சிகள் வழங்கப்படும்.

மன அழுத்தத்தை போக்கி மன நிறைவு தருகின்ற ஒரு பயிற்சி முகாம் இங்கு நடக்கிறது. இது முழுக்க ,முழுக்க இலவசமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முகாமுக்கு அனுப்பி பயன் பெறலாம். இவ்வாறு அவர் பேசினார். மாணவ, மாணவிகள் ஏராளமான பயிற்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.