• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

கொடைக்கானல் சூரிய ஆய்வகத்தில் பாதுகாவலர், ஆபரேட்டர் பணி..,

ByS.Ariyanayagam

Apr 27, 2026

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சூரிய ஆய்வகத்தில் ஆபரேட்டர் பணிக்கு நேர்முகத் தேர்வு நடக்க உள்ளது. இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் கொடைக்கானல் சூரிய ஆய்வகத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள உயர் திறன் வாய்ந்த தொலைநோக்கி இயக்குபவர் (ஆபரேட்டர்) மற்றும் பாதுகாவலர்
பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வில் தகுதியானவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். உயர் திறன் தொலைநோக்கி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்வி நிறுவனத்தில் இயற்பியல், வேதியியல், கணிதம்,
தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் உள்ளிட்ட துறைகளில் குறைந்தபட்சம் 60
சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி அல்லது பிசிஏ அல்லது அதற்கு இணையான தகுதி
பெற்றிருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: மே 5 ஆம் தேதி காலை 10
மணிக்கு நடைபெறும். பாதுகாவலர் பணிக்கு பணிக்கு விண்ணப்பிப்போர்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.