• Mon. Apr 27th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே பைக் மீது கார் மோதி 2 பேர் பலி!!

ByS.Ariyanayagam

Apr 27, 2026

திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகே பைக் மீது அரசு பேருந்து மோதி இரண்டு வட மாநில இளைஞர்கள் பலியாகினர்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியை அடுத்த மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகே திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பைக்கில் வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா(22), தில்சூல்(21) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அம்பாத்துரை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபாண்டி, சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் 2 பேரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.