எங்களுக்கு ஓட்டு போடலைன்னா அம்புட்டுதான்..! மிரட்டும் துரைமுருகன்
திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகள், உதயேந்திரம் பேரூராட்சியில் 15 வார்டுகளில்…
ரசிகர்களின் ரெக்வெஸ்ட் அக்செப்டெட்! நடிகையானார் பாடகி!
அரபிக்குத்து பாடலை பாடிய ஜோனிட்டா காந்தி கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அரபிக்குத்து பாடலை அனிருத்துடன் இணைந்து பாடிய ஜோனிட்டா காந்தி பாடி உள்ளார். இந்த லிரிக் வீடியோவில் பூஜா ஹெக்டேவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் படுகிளாசாக உள்ளார்…
ஐதராபாத் மிலிட்டரி ஹோட்டலில் தனுஷ்!
தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடித்து வந்தார் தனுஷ். இதுதவிர தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் வாத்தி படத்திலும் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று முதல் ஐதராபாத்தில் மீண்டும் துவங்குகிறது.…
ஆனைமலையில் கோலாகலமாக நடைபெற்ற குண்டம் திருவிழா!
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்ற குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் அமைந்துள்ளது மாசாணியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. குண்டம் திருவிழாவின் ஒரு பகுதியான மயான பூஜை கடந்த 14ம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு மேல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 16ம் தேதி காலை குண்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் சித்திரத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு மேல் குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் இன்று காலை சுமார் 9 மணியளவில் தலைமை பூசாரி குண்டம் முன்பாக சிறப்பு பூஜைகளை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் கருணாநிதி, கண்காணிப்பாளர் தமிழ்வாணன், புலவர் லோகநாதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து அம்மன் அருளாளி குண்டத்தில் பூப்பந்தை முதலில் உருட்டி விட்டார். அதன் பிறகு தலைமை பூசாரி, அருளாளிகள், முறைதாரர்கள் ஆகியோரைத் தொடர்ந்து பக்தர்கள் ஒவ்வொருவராக குண்டம் இறங்கினர். கொடியேற்றம் நாளில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டபடியே குண்டம் இறங்கினர். ஆண் பக்தர்கள் குண்டம் இறங்கி முடிந்த பிறகு, பெண் பக்தர்கள் குண்டத்தில் பூ அள்ளிக்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கென ஏராளமான பெண் பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து வேண்டுதலை நிறைவேற்றினர். குண்டம் இறங்கும் பகுதியில் தீயணைப்பு வாகனமும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அரசு மருத்துவர்கள், நர்சுகள் அங்கு அவசர தேவைகளுக்காக பணியமர்த்தப்பட்டனர். குண்டம் திருவிழாவுக்கென அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. வால்பாறை சரக போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்ன காமணன், பரமேஸ்வரன், செல்வராஜ், கார்த்தி ஆகியோர் மேற்பார்வையில் ஏராளமான போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், பெண் போலீசார், போக்குவரத்து போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நாளை (18ம் தேதி) கொடி இறக்குதல், மஞ்சள் நீராடல், மகா முனி பூஜை ஆகிய…
“எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள்”-கமல் பிரச்சாரம்
வருகிற 19-ஆம் தேதி நடைபெற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் கமலஹாசன் தன்னுடைய மக்கள் நீதி மையம் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.…
போராட்டமே வாழ்க்கையாகி விட்டது – சீமான் வேதனை
நாம் தமிழர் கட்சியின் 60-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை கடத்தி வாபஸ் பெற வைத்துள்ளனர்.சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியபோது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேர்மையான முறையில் நடந்த வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முறை தடுத்து நிறுத்தபட…
திருப்பரங்குன்ற கோவிலில் உண்டியல் எண்ணும் பணி தொடக்கம்!
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று உண்டியல் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது! உண்டியல் எண்ணும் பணியில், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்!
நாட்டுக்காக உயிர் நீத்த எங்கள் குடும்பத்தை கொச்சை படுத்தாதீர்கள்..பிரியங்கா காந்தி ஆவேசம்..
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் அவர் கூறியதாவது, “எனது குடும்பத்தினர் இந்த நாட்டுக்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். ஆனால் அதனை பாஜகவினர் கொச்சைப் படுத்துகின்றனர். எங்கள் குடும்பத்தினரின் தியாகங்கள்…
ஆங்கர் முதல் ஆக்டர் வரை! சிவகார்த்திகேயனின் திரைப்பயணம்!
நடிகர் சிவகார்த்திகேயன் தனது 37 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். ரசிகர்கள், பிரபலங்கள், திரைத்துறை நண்பர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல முகங்களைக் கொண்டவர்…
அனைத்து சாதியினர் அர்ச்சகராவதற்கு எதிராக புதிய சிக்கல்
கோவில்களில் சாமி சிலையை தொடுவது ஆகமத்துக்கு எதிரானது என அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு எதிராக புதிய வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து சாதியினர் அர்ச்சகர்களாகலாம் என்கிற நிலைமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சாதி ஆதிக்கத்துக்கு எதிராக தந்தை பெரியார் முன்வைத்த…