திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் 2026 ஆம் ஆண்டிற்கான பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்பு செய்வதற்கான விழுப்புணர்வு கூட்டம் தலைமையாசிரியர் ஆர்.வெங்கடேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ,

முன்னதாக அனைவரையும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயக்குமார், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ஜான்சன் , முன்னாள் வார்டு உறுப்பினர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர் , தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவரும் பள்ளியின் தூதுவர் சா.அருணன் பள்ளி மேலாண்மைக் குழு விழுப்புணர்வு குறித்து விளக்கினார். ஆசிரியர்கள் மணிகண்டன் , வசந்த் குமார், ரஜினி குமாரி, அனிதா சைனி, நோமலீஸ்வரி, கலைவாணி, ராஜேஸ்வரி, இன்பராஜ், ராஜேந்திரன், சுரேஷ்குமார், சங்கரலிங்கம், கோகுல், தீபா, ராமமூர்த்தி, திவாகர் உள்ளிட்டோர் மற்றும் பெற்றோர் திரளாக கலந்துக் கொண்டனர்.

முடிவில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் லாவண்யா ஜெயக்குமார் நன்றி கூறினார் , மேலும் திருவூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளியிலும் பள்ளி மேலாண்மைக் குழு விழிப்புணர்வு கூட்டம் தலைமையாசிரியை கி.விஜி அனந்தநாயாகி தலைமையில் நடைபெற்றது இதில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் அ.ஆனந்தி வரவேற்றார் , துணைத் தலைவர் எம்.பூர்ணிமா , எஸ்.எம்.சி ஆசிரியை பா.தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழிப்புணர்வு குறித்து பள்ளி மேலாண்மைக் கல்வியாளர் குழு உறுப்பினர் சா.அருணன் விளக்கினார் நிகழ்ச்சியில் நாகஜோதி, விஜி, வனிதா, உள்ளிட்ட பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர்




