• Thu. Sep 28th, 2023

ஆங்கர் முதல் ஆக்டர் வரை! சிவகார்த்திகேயனின் திரைப்பயணம்!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது 37 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். ரசிகர்கள், பிரபலங்கள், திரைத்துறை நண்பர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல முகங்களைக் கொண்டவர் சிவகார்த்திகேயன்..

விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது கலை பயணத்தை தொடங்கியவர் சிவகார்த்திகேயன்!விஜய் டிவியில் பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் சீசன் 2, ஜோடி நம்பர் ஒன் சீசன் 5, ஏர்டெல் சூப்பர் சிங்கர் 3, காஃபி வித் சிவா, விஜய் விருதுகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

சிவகார்த்திகேயனின் முதல் படம் மெரினா என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் முதலில் நடித்த படம் 2008 ல் அஜித் நடித்த ஏகன் படம் தானாம். இதில் அஜித்தின் நண்பராக சிவகார்த்திகேயன் நடித்திருந்தாராம். ஆனால் ஃபைனல் பிரிண்டில் பல காரணங்களால் சிவகார்த்திகேயன் நடித்த சீன்கள் நீக்கப்பட்டதாம்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதை அடுத்து அதன் தயாரிப்பாளர் பி.மதன், சிவகார்த்திகேயனுக்கு ஆடி கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். ஆனால் இதனை வாங்க எஸ்கே மறுத்து விட்டாராம். தயாரிப்பாளரும் விடாமல், இதை பரிசாக இல்லாமல் வெற்றியின் அடையாளமாக நினைத்து ஏற்றுக் கொள்ளும்படி கேட்டாராம். அப்போதும், நான் வாழ்க்கையில் ஒன்றுமே சாதிக்கவில்லை என்று மறுத்துள்ளார் எஸ்கே. கடைசியாக தயாரிப்பாளர் மிகவும் வற்புறுத்தியதால், வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என நினைவுப்படுத்திக் கொள்வதற்காக இந்த காரை ஏற்றுக் கொள்கிறேன் என கூறி வாங்கிக் கொண்டாராம்

எப்போதும் சிரித்த முகத்துடன், ஜாலியாக, காமெடி, கலாட்டாக என இருக்கும் சிவகார்த்திகேயனை தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் ரொம்பவே எமோஷனலான ஆளாம். மற்றவர்களை பிராங்க் பண்ணி விளையாடுவது எஸ்கே.,வுக்கு மிகவும் பிடிக்குமாம். அடிக்கடி ஏதாவது செய்து, யாரையாவது பிராங்க் செய்து கொண்டே இருப்பாராம். ரஜினி முருகன் ஷுட்டிங்கின் போது கீர்த்தி சுரேஷை பலமுறை பிராங்க் செய்துள்ளாராம். ஒருமுறை தனது சகோதரியின் மாப்பிள்ளை ரகசியமாக சிகரெட் பிடிப்பதாக பிராங்க் செய்துள்ளார். அதை உண்மை என நம்பி டென்ஷனான எஸ்கேயின் சகோதரிக்கும் அவரது மாப்பிள்ளைக்கும் பெரிய சண்டையாயே வந்து விட்டதாம்.

நடிகர், தயாரிப்பாளர் என்பதை தாண்டி பாடலாசிரியராகவும் ரசிகர்களின் மனங்களை கவர்ந்து, வெற்றி பெற்றுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

நடிகர் என்பதை தாண்டி தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என தான் எடுக்கும் அத்தனை அவதாரங்களிலும் ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்து, தான் தடம் பதிக்கும் இடங்களில் எல்லாம் வெற்றி கொடி நாட்டி வருகிறார் சிவகார்த்திகேயன். பாடலாசிரியராக சிவகார்த்திகேயன் வரிகளில் உருவாகி ஹிட் அடித்த பாடல்கள் பற்றி ஒரு பார்வை!

கோலமாவு கோகிலா
நெல்சன் திலீப்குமார் டைரக்டராக அறிமுகமான கோலமாவு கோகிலா படத்தில் அனிருத் இசையில், கல்யாண வயசு தான் பாடல் தான் சிவகார்த்திகேயன் பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் எழுதிய முதல் பாடல். யோகிபாபு ஹீரோவாக நடித்த இந்த படத்தில் மெலடி, லவ் சாங்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது செம ரீச் கொடுத்தது.

கூர்கா
மீண்டும் யோகிபாபு ஹீரோவாக நடித்த கூர்கா படத்தில் ஹே போயா என்ற பாடலை எழுதினார் சிவகார்த்திகேயன். விளையாட்டாக சிவகார்த்திகேயன் எழுதிய இந்த பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து நட்பிற்காகவும், பிரபலங்கள் பலர் கேட்டுக் கொண்டதாலும் தொடர்ந்து பல பாடல்களை எழுத துவங்கினார்.

நம்ம வீட்டு பிள்ளை
யோகிபாபு படங்களை தொடர்ந்து தான் ஹீரோவாக நடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்திற்காக காந்த கண்ணழகி பாடலை எழுதியதும் சிவகார்த்திகேயன் தான். முதல் முறையாக தனது படத்தில் வரும் டூயட் சாங்கிற்காக தானே பாட்டெழுதி நடித்தார் சிவகார்த்திகேயன்.

ஆதித்ய வர்மா
தெலுங்கில் பிளாக் பஸ்டர் படமாக ஓடிய அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா படத்தில் இது என்ன மாயமோ என்ற பாடலை சிவகார்த்திகேயன் எழுதினார். முதல் முறையாக புதிய இசையமைப்பாளரின் இசைக்கு சிவகார்த்திகேயன் பாட்டெழுதியது இந்த படத்தில் தான்.

டாக்டர்
மீண்டும் நெல்சன் திலீப்குமார், அனிருத், சிவகார்த்திகேயன் காம்போவில் உருவான டாக்டர் படத்தில் வரும் செல்லம்மா பாடலை எழுதினார் சிவகார்த்திகேயன். பட ரிலீசிற்கு முன்பே செம ஹிட்டான இந்த பாடல் தான் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்களில் முதல் முறையாக வெளியிடப்பட்ட உடனேயே செம வைரலான பாடல். டாக்டர்கள் படத்தில் வரும் சோ பேபி என்ற பாடலை எழுதியதும் சிவகார்த்திகேயன் தான்.

நாய் சேகர்
காமெடியன் சதீஷ் ஹீரோவாக அறிமுகமான நாய் சேகர் படத்திற்காக எடக்கு மொடக்கு பாடலை எழுதினார் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் பணியாற்றிய காலத்தில் இருந்தே சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இருப்பவர் சதீஷ். இதனால் அவர் ஹீரோ ஆகும் படம் என்பதால் சிவகார்த்திகேயன் பாடல் எழுதி உள்ளார்.

எதற்கும் துணிந்தவன்
சிவகார்த்திகேயன் – சூர்யா முதல் முறையாக இணைந்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். யாரும் எதிர்பாராத இந்த காம்போ, சூர்யா நடித்து மார்ச் 10 ம் தேதி ரிலீசாக உள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் ஒன்றிணைந்தது. இதில் செகண்ட் சிங்கிளாக வெளியிடப்பட்ட சும்மா சுர்ருன்னு என்ற பாடலை எழுதினார் சிவகார்த்திகேயன்.

பீஸ்ட்
விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட்டுள்ள அரபிக்குத்து பாடல் கடந்த 3 நாட்களாக இணையத்தை அடித்து நொறுக்கி வருகிறது. இப்படி ஒரு குத்தை இதுவரை கேட்டதில்லை என்பதை போல், ஹலமதி ஹபிபோ பாடல் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரையும் ஆட வைத்துள்ளது. இதன் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்ட 2 நாட்களில் 35 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இந்த அராபிக் குத்து பாடல் வரிகளை இயற்றியவர் சிவகார்த்திகேயன்!

இவ்வாறு நடிப்பை தாண்டி பல பன்முக திறமைகளை கொண்ட சிவகார்த்திகேயன், மேலும் வெற்றிபெற நமது வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *