• Fri. Apr 18th, 2025

பேராவூரணியில் வருவாய்த்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி….

Byadmin

Jul 29, 2021

பேராவூரணியில் வருவாய்த்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி – நகரின் முக்கிய வீதிகளில் ஆண்கள் வெள்ளை நிற உடையுடனும் பெண்கள் நீல நிற உடை அணிந்து பங்கேற்பு.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில், தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருகின்றனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவுப்படி, பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து நீலகண்ட பிள்ளையார் கோயில் வரை கொரோனா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேராவூரணி வட்டாட்சியர் ஜெயலட்சுமி முன்னிலையில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

இதில் வருவாய்த் துறையைச் சேர்ந்த துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், உள்ளிட்ட ஆண்-பெண் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் ஆண்கள் வெள்ளை வேட்டி சட்டை அணிந்தும், பெண்கள் நீல வண்ணத்திலான சேலை அணிந்தும் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். தொடர்ந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் கடைவீதி வியாபாரிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.