சித்திரம் பேசுதடி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மிஷ்கின். அதைத் தொடர்ந்து அஞ்சாதே என்ற வெற்றி படத்தை கொடுத்தார். இவர் இயக்கத்தில் வெளியான பிசாசு படத்தில் பேயை தேவதையாக மிஸ்கின் காட்டியிருந்தது ரசிகர்களை பிரம்மிக்க வைத்தது. இந்நிலையில் பிசாசு வெற்றியை தொடர்ந்து மிஷ்கின் பிசாசு பாகம் இரண்டை தற்போது இயக்கி வருகிறார் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா லீட் ரோலில் நடித்து உள்ளார். விஜய் சேதுபதி, பூர்ணா சந்தோஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். பிசாசு 2 படப்பிடிப்பு முடிந்து தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய மிஷ்கின் யுவன் சங்கர் ராஜாவின் இசையின் மீது எனக்கு பெரிதாக ஆர்வமில்லை. அவர் ஒரு நல்ல இசையமைப்பாளர், மிகத் திறமையானவர். மாடர்னான கம்போசர் கூட . ஆனால் என்னுடைய இசை பார்வை வேறு யுவன் சங்கர் ராஜாவின் இசை பார்வை பல்வேறு! எனவே எங்க இரண்டு பேருக்கும் செட்டாகாது எனக்கு இளையராஜாவும் கார்த்திக் ராஜாவும் போதும். யுவன் சங்கர் ராஜா எனக்கு செட்டாக மாட்டார்’ என்று கூறியுள்ளார்!
