• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

திருச்சி வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு..,

தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நாளை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னைலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.

திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என் நேரு, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேயர் அன்பழகன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் கார் மூலம் தஞ்சாவூருக்கு புறப்பட்டுச் சென்றார். தஞ்சையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வதை முன்னிட்டு தஞ்சை பொறுப்பு திமுக நிர்வாகிகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.