இந்தியை இணைப்பு மொழியாக கொண்டுவருவது குறித்து அமித்ஷாவின் பேச்சுக்கு நாடு முழுவதும் உள்ள இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணமாலையும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, தமிழ் மொழி தான் அனைத்து இந்திய மொழிகளுக்கும் இணைப்பு மொழியாக இருக்கவேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூறிய கருத்துக்கு ஆதரவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தமிழால் இணைவோம் என்று பதிவிட்டுள்ளனர்.அவர்களின் இந்த பதிவு விலைவாசி உயர்வையும் தாண்டி மக்களின் குரலை ஒலிப்பதாக உள்ளது எனவும் மத்திய அரசு மேற்கொண்டு வரும் தொடர் இந்தி திணிப்பு முயற்சியை கைவிட வேண்டும் என்றும் கூறுவது போல் உள்ளது என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

