செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக வெற்றி கழகத்தின் மாநில நிர்வாகி மின்னல் குமார் மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து உரையாற்றினர்.
கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், கடந்த 100 நாட்களில் கட்சி மேற்கொண்ட மக்கள் நலப் பணிகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கம் மற்றும் பல்வேறு சமூக சேவை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர். மேலும், வரும் காலங்களில் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் கருத்துகளை பகிர்ந்தனர்.

இந்நிலையில், கூட்டத்தில் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் பங்கேற்பு இல்லாததாக அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பொதுக்கூட்டத்தில் மக்கள் திரளாகக் கூடாததால், கட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் போதிய ஆதரவு இல்லை என்பதற்கான அறிகுறியாக இது பார்க்கப்படுவதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் சாதனை பொதுக்கூட்டம் தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில், இந்த நிகழ்வு கவனத்தை ஈர்த்துள்ளது.




