• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு..!

ByS.Ariyanayagam

Jul 23, 2026

வேலூரில் விபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் பலியானார்.
வேலூர்: திண்டுக்கல் மாவட்டம் மார்க்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி (25), வேலூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

பணிக்காக மாவட்ட மேற்பார்வையாளர் சூர்யாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, விருப்பாட்சிபுரம் அருகே பெட்ரோல் டேங்கர் லாரியை முந்த முயன்ற போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி இருவரும் சாலையில் விழுந்தனர். இதில் தங்கபாண்டி லாரியின் பின்புற சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் சென்ற சூர்யா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.